தமில்….
தவறு விடவில்லை நான்….
நிச்சயம்…அது…நிச்சயம்!
பக்தியுடனேயே தமிழ் கற்றேன்…
விடுவேனா தவறு…அதில்…
கணணித் தட்டச்சுப் பிழையுமல்ல…
நானறிவேன்… உண்மை!
ஒருமுறைக்கிருமுறை சரி பார்த்ததல்லவா…
வரவே வராது பிழை….
எல்லாம் சரியாயிருக்க…
தமிழ் - தமிலாகிய கதை தானென்ன?
இது இன்றைய யதார்த்தத்தின் விம்பமோ?
இல்லை…இலகுவாக - காலஞ்செய்த கோலமோ?
கேள்விக்கு மேல் கேள்விகள்….
பாவம் நான்… எனக்குப் பதில்தான் தெரியவில்லை…
ஏனெனில் நான் படிக்கும் “சிலபசில்”…
இந்தக் கேள்விக்கெல்லாம் பதிலில்லை…
இதற்குப் பதில் தேட நேரமில்லை என்னிடம்…
நேரமிருந்தும் ஆர்வமில்லைப் பலரிடம்…
ஆனால் சாட்டு மட்டும் உண்டு எம்மிடம்…
“ஒரு “ல” தானே வித்தியாசம்... - எல்லாம் ஒன்றுதான்”
தமிழ், தமிலாகி விட்டால் பரவாயில்லை…
மொழி, பண்பாடு, பற்றி எமக்கென்ன கவலை….
வாயிற்கு வுருவதைப் பேசுவோம் -
மற்றவருக்குப் புரிந்தால் சரி தானே!
நண்பா கவனம்… நாளை இந்தத் தவறுகளால்
உன் “வாழ்க்கை” சில வேளை “வழுக்கை” ஆகிவிடும்!
என்.கே.அஷோக்பரன்
1 comments:
தமிழ் தமிலானது...
சிறு தவறே எம் வாழ்வை சீர்கெடுக்கும் என்று சிறப்பாக சொல்லிவிட்டீர்..
வாழ்த்துக்கள்,,வளர,,
தமிழன்னையும் என் அண்ணனும்...
Post a Comment